Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 20 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
உலகளாவிய ரீதியில் அமெரிக்க விஸா தாமதமாகியுள்ளமை குறித்த தகவல்களை அமெரிக்கத் தூதரகம், வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தின் பொதுமக்கள் தொடர்புப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு;ள்ளதாவது,
தமது விஸா முறைமையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் விஸா செயற்பாடுகளுக்குரிய பணியகமானது உலகளாவிய ரீதியில் தொழிநுட்பப் பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சினையானது எந்தவொரு நாட்டுக்கோ அல்லது விஸா வகைகளுக்கோ மாத்திரமானதல்ல.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு எமது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சேவையை முழுமையாக மீளமைப்பதற்கும் நாம் விரைவாகச் செயற்பட்டு வருகின்றோம்.
2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதிக்குப் பின்னர் அங்கிகரிக்கப்பட்ட குடிபெயராத விசாக்களை அச்சிடுவதில் ஐக்கிய அமெரிக்கத் தூதரகங்கள் தற்போது சிக்கலை எதிர்கொண்டுள்ளன.
அதனைத் தவிர ஜூன் 9ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட புதிய விஸா விண்ணப்பங்களுக்கான நேர்காணல்களையும் ஐக்கிய அமெரிக்கத் தூதரகங்களால் நடத்த முடியாதுள்ளது.
ஜூன் 9ஆம் திகதிக்குப் பின்னர் DS 160 இணைய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரிகள்
http://www.ustraveldocs.com/lk/ என்ற இணையத்தளத்தில் கிடைக்கப்பெறும் அறிவுறுத்தல்களைப் பயன்படுத்தி தமது நேர்காணல் நியமன நேரங்களை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த விடயம் குறித்த புதிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு இணையத்தளம் http://srilanka.usembassy.gov/ அல்லது கொழும்பு ஐக்கிய அமெரிக்கத் தூதரக பேஸ் புக் பக்கத்துடன் இணைந்திருங்கள்.
வாரநாட்களில் முற்பகல் 8 மணிமுதல் இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் 011-770-3703 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமும் அல்லது மின்னஞ்சல் உதவிச் சேவையான srilanka@ustraveldocs.com க்கு மின்னஞ்சலிடுவதன் ஊடாகவும் நேர்காணல் தினத்தை மாற்றிக் கொள்வதற்கான உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago