2025 மே 16, வெள்ளிக்கிழமை

மதுபானப் பாவனையால் தேக ஆரோக்கியமும் பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மதுபானச் சாலைகள் அதிகரித்துள்ளதால் சமூகச் சீரழிவுகள் மாத்திரமின்றி, தேக ஆரோக்கியமும் பாதிக்கப்படுகின்றது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சீ.யோகேஸ்வரன், இதைக் கட்டுப்படுத்துவது தொடர்பில்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்றும் கூறினார்.

இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நேற்று  சனிக்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மதுபானப்  பாவனையில் மட்டக்களப்பு மாவட்டம் முதலிடத்துள்ளது. இந்த மாவட்டத்தில் 20 மதுபான விற்பனை நிலையங்களே இருக்கவேண்டும். ஆனால், 67 மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன.

மேலும், எங்களின் இளம் சமூகத்தை ஊடுருவித் தாக்குகின்ற போதைவஸ்து பாவனையை இல்லாமல் செய்வதற்கு  சிந்திக்கவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .