2025 மே 16, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை இடமாற்றுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 21 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை, மாகாணத்தின் மத்திய இடமான மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இடமாற்றப்பட வேண்டுமென்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்தார்.

இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு   உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அன்று ஒன்றாக இருந்தபோது, இந்த மாகாண சுகாதார சேவைகள் பணிமனை திருகோணமலையில் நிறுவப்பட்டது. ஆனால், இன்று கிழக்கு மாகாணம் தனியாக இயங்குகின்றது. இந்த நிலையில், கிழக்கு மாகாணத்;தின் மூன்று மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டம் மத்திய இடமாக இருப்பதால் மட்டக்களப்புக்கு இந்த அலுவலகம் மாற்றப்படவேண்டும்' என்றார்.  

'கிழக்கு மாகாணத்தில் சிரேஷ்ட விசேட தரத்திலான பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான இரண்டு வெற்றிடங்கள் உள்ளன.  மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  21 பேருக்கு வெற்றிடங்களுள்ளன.  இந்த வெற்றிடங்கள் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய  மாவட்டங்களில் உள்ளன.

சுமார் 15 இலட்சம் மக்கள் வாழ்கின்ற இந்த கிழக்கு மாகாணத்தில்,  45 சுகாதார வைத்திய அலுவலகங்களும் 105 வைத்தியசாலைகளும் உள்ளன. ஆளணி மற்றும்  நிதிப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் இவை சிறப்பாக இயங்குகின்றன' எனவும் அவர் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .