Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 21 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கழிவுகள் கொட்டப்படுகின்ற ஏறாவூர் வாவிக்கரையோர குப்பைமேட்டுக்கு கடந்த 14ஆம் திகதி தீ வைக்கப்பட்டதன் காரணமாக ஏறாவூர் நகர பிரதேசத்தின் வாவிக்கரையோரப் பகுதி கடந்த ஒரு வாரமாக புகை மூட்டத்துடன் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
அத்துடன், தற்போது தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று (கச்சான் காற்று) பலமாக வீசுவதால் மக்கள் வாழும் இடங்களில் புகையுடன் சாம்பலும் வந்துபடிகிறது. இதன் விளைவாக அங்குள்ளவர்கள் சிரமத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
ஏறாவூர் வாவியோரத்தின் ஒரு பக்கம் குப்பைகள் கொட்டப்படும் அதேவேளை, மறுபுறம் பாடசாலை, கலாசார மண்டபம், சமூகப் பராமரிப்பு நிலையம், வாவிக்கரையோரப் பூங்கா, விளையாட்டுத்திடல், மீனவர் விற்பனைக் கட்டடம், பிரதேச செயலகம், பள்ளிவாசல்கள் ஆகியன அமைந்துள்ளன.
இது தொடர்பாக ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் தெரிவிக்கையில், 'ஏறாவூர் வாவிக்கரையோர குப்பைமேட்டுக்கு யாரோ தீ வைத்துள்ளதால், இந்த நிலை தோன்றியுள்ளது. தீயை அணைக்கும் நடவடிக்கையில் நகரசபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், தீயை இன்னமும் முழுமையாக அணைக்க முடியவில்லை'என்றார்
சுமார் 10,000 குடும்பங்களையும் 50,000 மக்கள் தொகையையும் கொண்டுள்ள ஏறாவூர் நகர பிரதேசம், காணிப் பற்றாக்குறையை எதிர்நோக்குவதால் குப்பை கொட்டுவதற்கு கூட இடமில்லாத வகையில் இங்கு மனிதாபிமான நெருக்கடி தலைதூக்கியுள்ளது என்று ஏறாவூர் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago