Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 21 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பொதுமக்கள் வீதி ஒழுங்குகளை கடைப்பிடிக்குமாறு காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (20) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மைக் காலங்களில் ஏற்பட்;ட மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் குறிப்பாக காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் வாழைச்சேனைப் பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்தவர்கள் அனைவருக்கும் முக்கியமாக தலைகளிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்குக் காரணம் தலைக்கவசம் அணியாமையேயாகும். அனைத்து இடங்களிலும் பொலிஸார் கண்காணிப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளபோதிலும் மோட்டார் சைக்கிளை பயன்படுத்துபவர் தன்னளவில் சரியான முறையில் சிந்தித்துச் செயற்படாதவரை இவ்வாறான விபத்துக்களை தவிர்ப்பது சிரமமானதாகவே அமையும். அனைவரும் வாகனத்தை செலுத்தும்போது வீதி ஓழுக்கத்தைப் பேணுவதன் மூலமே வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago