2025 மே 16, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் புதிய தலைவர் பதவியேற்பு

Thipaan   / 2015 ஜூன் 21 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 சி2 மட்டக்களப்பு மாவட்ட கழகத்தின் 42ஆவது தலைவரின் பதவி அமர்வு நிகழ்வுகள் கழக மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றன.

22 வருடங்களாக கழகத்திலிருந்து சேவைகள் புரிந்த கலாநிதி லயன் கே. செல்வராசா புதிய தலைவராக செய்யப்பட்டார்.

தலைவருக்கான விருதுச் சின்னத்தை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட லயன்
ரி. அருணகிரிநாதனும் மற்றும் நினைவுச்சின்னம், பதவிக்கான பதக்கங்களை விடைபெற்றுச் செல்லும் தலைவர் லயன் எம். மகேந்திரராஜா வழங்கி வைத்தார்.

இதன்போது பிரதம விருந்தினர் 2015ஃ2016ஆம் ஆண்டுக்காக தெரிவான கழகத்தின் கபினட் சபை உறுப்பினர்களை பதவியில் ஸ்தாபித்தார்.

விடைபெற்றுச் செல்லும் தலைவர் அவரது பதவிக் காலத்தில் சேவைகள் புரிந்த கபினட் சபை உத்தியோகத்தர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .