Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 22 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெறவிருப்பதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 6 தினங்களுக்கு 8 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை அறிவித்துள்ளது.
இதற்கிணங்க நாளை செவ்வாய்க்கிழமை (23) குறிஞ்சாமுனை, கன்னங்குடா, மண்டபத்தடி, கரையாத்தீவு, பருத்திச்சேனை, பொத்தியாவலை, வாழைக்காலை, காஞ்சிரங்குடா ஆகிய பகுதிகளிலும் 24ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அம்பிளாந்துறைப் பகுதியிலும் 25ஆம் திகதி களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேத்தாதீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் 26ஆம் திகதி வாழைச்சேனை வைத்தியசாலை பகுதி, கறுவாக்கேணி, கிண்ணயடி, கிரான், புளிபாய்ந்தகல் பகுதி, சந்திவெளி, முறக்கட்டாஞ்சேனை மற்றும் சித்தாண்டி ஆகிய பகுதிகளிலும் 27ஆம் திகதி மட்டக்களப்பு நகர பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட இருதயபுரம் மற்றும் சின்னஊறணி, 29ஆம் திகதி வாழைச்சேனை பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட திகிலிவெட்டை, குளத்துவெட்டை, பொன்டுகள்சேனை மற்றும் பூலாக்காடு ஆகிய இடங்களிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago