2025 மே 16, வெள்ளிக்கிழமை

காடு மண்டிக் கிடக்கும் நெற் களஞ்சியசாலைகள்

Princiya Dixci   / 2015 ஜூன் 23 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 'தேசத்துக்கு மகுடம்' அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2013ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட நெற் களஞ்சியசாலைகள் இன்னமும் பாவனைக்குத் திறந்து வைக்கப்படாமலிருப்பதனால் குறித்த கட்டடங்களும் அதன் சுற்றுச்சூழலும் காடு மண்டிக் கிடப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை - கஜுவத்தை சந்தியில் சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நெற் களஞ்சியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை விரைவாகத் திறந்து, தமது போகங்களில் விளையும் நெல்லை விற்பனை செய்வதற்கு உதவுமாறு பிரதேச விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

'தேசத்துக்கு மகுடம்' திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் நெல் விளையும் ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒன்று என்ற அடிப்படையில் நெற் களஞ்சியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. ஆனால், அவற்றில் எந்தவொரு நெற் களஞ்சியசாலைகளும் உத்தியோகபூர்மாகத் திறந்து விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .