2025 மே 16, வெள்ளிக்கிழமை

நெல் சந்தைப்படுத்தும் வளாகத்துக்குள் காட்டு யானை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 23 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம், மண்டூர், நவகிரிப்பிரிவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான தும்பங்கேணிக் கிராமத்திலுள்ள நெல் சந்தைப்படுத்தும் வளாகத்துக்குள் திங்கட்கிழமை (22) அதிகாலை காட்டு யானை ஒன்று உட்புகுந்து  நெல் சந்தைப்படுத்தும் வளாகத்தின் சுற்று வேலியின் ஒரு பகுதியை சேதப்படுத்தியுள்ளது.

நெல்லின் வாசத்தை நுகர்ந்த காட்டு யானை, வளாகத்தின் சுற்று வேலியை உடைத்துக் கொண்டு உள்நுளைந்தபோதிலும் கட்டடத்துக்கு எவ்வித சேதமும்  ஏற்படுத்தவில்லை. இதனால், சுமார் 15,000 ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பழுகாமம், மண்டூர், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச்  பொது முகாமையாளர் வ.பரமலிங்கம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .