2025 மே 16, வெள்ளிக்கிழமை

'அங்கிகாரமின்றி 20ஆவது திருத்தம் கொண்டு வரப்படுமாயின் த.தே.கூ எதிர்க்கும்'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 24 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிறுபான்மைச் சமூகங்களின் அங்கிகாரம் பெறாமல் 20ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுமாயின், தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு அதை எதிர்க்குமென்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில்  ஊடகங்களுக்கு நேற்று  செவ்வாய்க்கிழமை (23) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், '20ஆவது திருத்தச்சட்டம்  தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரிவாக ஆராய்ந்துள்ளது. சிறுபான்மைச் சமூகங்களின் அங்கிகாரம் பெறாமல் 20ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்துக்;கு கொண்டுவரப்படுமாயின், நிச்சயமாக சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிராக வாக்களிக்கும்' என்றார்.  

'தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டத்தினால் சிறுபான்மைச் சமூகம் முற்றாக பாதிக்கப்படுவதுடன், சிறுபான்மை சமூகத்துக்கோ அல்லது சிறிய கட்சிகளுக்கோ நாடாளுமன்ற அங்கத்துவம் பெறுவதென்பது சிக்கலான விடயமாக உள்ளது.

மேலும், தொகுதிகள் பிரிக்கப்படுகின்றபோது தொகுதிகள் குறைத்து காட்டப்படுகின்றன. ஏற்கெனவே இருக்கின்ற தொகுதிகள் கூட குறைந்து காணப்படுகின்றன. இதனால் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். கிழக்கு மாகாணத்தில் கூட மட்டக்களப்பு, பொத்துவில் ஆகிய இரட்டை தொகுதிகள் என்ன வடிவத்தை பெறப்போகின்றது என்பதிலும் சிக்கல் காணப்படுகின்றது' எனத் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .