2025 மே 16, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் பெரிய தோணாவை துப்பரவு செய்யும் பணி

Suganthini Ratnam   / 2015 ஜூன் 24 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபை பிரிவில் பெரிய தோணாவை துப்பரவு செய்யும்  பணி கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  சிப்லி பாறூக்கின்; வேண்டுகோளுக்கு இணங்க நேற்று செவ்வாய்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டது.

மழைக்காலங்களில் நீர் வடிந்தோடக்கூடிய பெரிய தோணா நீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நின்று வருகின்றது. சீரற்ற ஒழுங்கின் காரணத்தினால் நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதானல் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்ற நிலைமையும் மழை காலம் அல்லாத காலங்களில் தேங்கி நிற்;கும் நீரின் காரணமாக நுளம்பு பெருக்கம் ஏற்பட்டு நோய் பரவக்கூடிய நிலையும் காணப்படுகின்றது.

இந்த பெரிய தோணாவினை நல்ல முறையில் அமைத்து நீர் ஓடக்கூடிய வகையில் செப்பனிடப்படக்கூடிய தேவை காணப்பட்ட போதிலும், இவ்வளவு காலமும் அது புறக்கணிக்கப்பட்டு வந்திருப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இதற்கான ஆக்கபூர்;வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தற்காலிகமாக இந்த பெரிய தோணாவை துப்பரவு செய்கின்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .