2025 மே 16, வெள்ளிக்கிழமை

வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்ய வேண்டும்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 24 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமத்துக்கு ஒரு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை   ஒரு மாத காலத்தினுள் நிறைவுசெய்ய வேண்டுமென்று  அப்பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (23) காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், '18  கிராம அலுவலர் பிரிவுகளிலும்  முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை  விரைவாக முடித்து மக்கள் பாவனைக்கு வழங்கவேண்டும். இதற்காக அனைத்து உத்தியோகஸ்தர்களும்; கூடிய கவனம் எடுத்து செயற்படவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .