Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 24 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல், கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவித்தி அமைச்சர் கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடிவட்டைக் கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (21) சென்று மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.
அக்கிராமத்தின் முக்கிய பிரச்சினைகளான முறுத்தானைக் கிராமம் தொடக்கம், 46இல் குளத்துக்கிடையிலான வாய்க்காலை புனருத்தாரணம் செய்தல், ஜிம்கலி அணைக்கட்டை புனரமைத்தல் மற்றும் குடிநீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு காணல் ஆகிய பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு தருமாறு மேற்படி கிராம பொதுமக்களால் அமைச்சரின் கவனத்துக்குக்கொண்டு வந்தனர்.
பின்னர் அப்பகுதியில் அமைந்துள்ள 46இல் குளம், ஜிம்கலி அணைக்கட்டு, காணந்தனை அணைக்கட்டு மற்றும் எவ்வைப் பாளம் போன்ற இடங்களையும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிடப்பட்டார்.
மக்களின் இவ்வாறான பிரச்சினைகளுக்கு மேற்கொள்ள முடியுமான தீர்வுகள், மாகாணசபையூடாக தீர்க்கப்படக் கூடிய பிரச்சினைகள் மற்றும் நாட்டு அரசியல் சூழல்களும் அந்த சூழல்களின் மத்தியில் எமது வடக்கு, கிழக்கு மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்? போன்றன தொடர்பாக அமைச்சர் இதன்போது மக்களுக்கு விளக்கமளித்தார்.
இதன்போது கல்லடி வட்டடை கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், ஏனைய கிராம பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago