2025 மே 16, வெள்ளிக்கிழமை

'இன்புளுவன்சா தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும்'

Thipaan   / 2015 ஜூன் 24 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்சக்திவேல்

தீவிரமாக பரவிவரும் இன்புளுவன்சா தொற்றினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு கற்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளதுள்ளனர். இத்தொற்று நோய்க்கு ஆளாகாமல் அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும் என மண்டூர் பிரதேசத்துக்கான பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.விக்னேஸ்வரராஜா தெரிவித்தார்.

இன்புளுவன்சா தொற்று நோய் சம்பந்தமாக மாணவர்களை அறிவுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு மண்டூர் மகா வித்தியாலயத்தில் செவ்வாய்கிழமை (23) இடம் பெற்றது.

இதன்போது அவர் உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர், மாணவர் மத்தியில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் இருந்து இந்நோய் கொண்டுவரப்பட்டுள்ளது இந் நோயானது இலங்கையில் அதிவேகமாக பரவிவருகின்றது.

இதுவரை, 10 கற்பிணிப் பெண்கள் உட்பட மொத்தமாக 38 உயிர்களை காவு கொண்டுள்ளது.

தும்முதல் மூலம் வெளிவரும் துகளினாலும், காற்றினாலும் இது வேகமாக பரவுகின்றது.

இந்நோயின் அறிகுறிகளாக காச்சல்,தலையிடி, இருமல், தசைநோ, மூக்கினால் நீர்வடிதல் போன்றன காணப்படும்.

இவ் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடவேண்டும். இந் நோயானது கற்பிணி பெண்களையும் சிசுக்களையுமே  தாக்குகின்றது. ஆஸ்த்மா நோய் இருக்கின்றவர்களும் மிக அவதானமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .