Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 ஜூன் 24 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.அமைப்பில் சாரணர் திறந்த குழு ஆரம்பிக்கப்பட்டு 15ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, நேற்று செவ்வாய்க்கிழமை (23) மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.அலுவலகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுகளின் போது, சாரணர் சேவைகளுக்காக உள்ளீர்க்கப்பட்ட நான்கு சாரண ஆசிரியர்களுக்கான அனுமதிக்கப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
வை.எம்.சி.ஏ.சாரணர் திறந்த குழு ஆரம்பிக்கப்பட்டு 15ஆவது ஆண்டு நிறைவினை கொண்டாடும் இந்தவேளை, குறித்த குழுவில் 89 சாரணிய மாணவர்கள் உள்ளதாகவும் இவற்றில் 24 பெண் சாரணியர்கள் அடங்குவதாகவும் பொறுப்பாளர் எஸ்.பற்றிக் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளில் சாரணிய குழுக்கள் இயங்கிவரும் நிலையில், அவற்றில் இணைய முடியாத வறிய மாணவர்களை இதில் இணைத்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
வை.எம்.சி.ஏ. திறந்த சாரணர் குழுவின் பொறுப்பாளர் எஸ்.பற்றிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யின் தலைவர் டி.டி.டேவிட் பிரதம அதிதியாகவும் தாண்டவன்வெளி புனித ஜோசப்வாஸ் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.சுதாகரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago