Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 23 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜியின் 7ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு தாமரைக்கேணி மங்கையற்கரசியர் மகளிர் இல்லத்தில் செவ்வாய்கிழமை (23) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அமெரிக்காவின் வெள்ளை இனத்தில் ஜனனித்து இந்து சமயத்தின் மேன்மையை தமது 19ஆவது வயதில் உணர்ந்து ஒரு இந்துவாக தன்னை உருவாக்கி தன்னை இந்துசமய வழியில் ஈடுபடுத்தி கொண்டதுடன் எமது இந்து மக்களை இந்திய நாட்டிலும் இலங்கை நாட்டிலும் உண்மையான இந்துவாக வாழ வைப்பதற்காக அயராது உழைத்தவர்.
பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு இந்து வர்த்தன சங்க உறுப்பினர் எஸ்.சிவபாதசுந்தரம், பேரவை செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் நா.புவனசுந்தரம், கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர் பாரதிதாசன், சைவப்புலவர் திருமதி.எஸ்.ஞானசூரியம், கோட்டமுனை பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.சா.ராமதாஸ் குருக்கள், பேரவை பிரதிநிதிகள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago