2025 மே 16, வெள்ளிக்கிழமை

வெலிகந்த சுதந்திர வர்த்தக வலயத்துக்கான பணிகள் பூர்த்தி

Menaka Mookandi   / 2015 ஜூன் 24 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எம்.அஹமட் அனாம்

பொலன்நறுவை, மட்டக்களப்பு மாவட்டங்களை உள்ளடக்கியதாக வெலிகந்த பிரதேசத்தில் பாரிய சுதந்திர வர்த்தக வலயத்தை ஆரம்பிப்தற்கான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற கூட்டத்தின் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வெலிக்கந்த பிரதேசத்தில் 800 ஏக்கர் காணியில் பாரிய சுதந்திர வர்த்தக வலயம் அமையப் பெறவுள்ளதாகவும், இதன் மூலம் பொலநறுவை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொழில் வாய்ப்பற்றவர்களுக்கு இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.

'இந்த பேச்சுவார்த்தையின் பயனாக 16 பல்கலைக்கழகங்களையும் இணைந்த பல்கலைக்கழகங்களையும்; உள்ளடங்கலாக பொதுவான கல்வியியல் பூங்காவொன்றை 250 ஏக்கர் காணியில் மட்டக்களப்பு மாவட்டத்தில்; அமைப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

109இற்கும் மேற்பட்ட கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள10ர் மாணவர்கள் மட்டுமின்றி, பல நாடுகளில் இருந்து வரும் மாணவர்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்' எனவும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் டுபாய் நாட்டின் கம்மான் குரூப் தலைவர் ஷேக் அப்துல் றபீக் மற்றும் அவரது குழுவினரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .