2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஒரு சிலர் விட்ட தவறுகளுக்காக தமிழினம் பிரிவதை விரும்பவில்லை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 24 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,வா.கிருஸ்ணா

தமிழர்கள்  ஒற்றுமையாக வாழவேண்டும், தமிழ்த் தேசியம் மலரவேண்டும் என்ற நோக்குடன் வாழ்கின்ற இவ்வேளையில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும்  தமிழர் விடுதலைக் கூட்டணியை, த.தே.கூ. வெளியேற்றுகின்றது என்ற செய்தி மிகுந்த மன வேதனை தருகின்றது. ஒரு சிலர் விட்ட தவறுகளுக்காக தமிழினம் பிரிந்து வாழ்வதை தான் விரும்பவில்லை என்று  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார்.  

களுவாஞ்சிக்குடியிலுள்ள அவரது இல்லத்தில் திங்கட்கிழமை (22) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தற்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படுகின்றது என்று  ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. எதிர்வரும்  தேர்தலில்; ரெலோ, தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ்., பிளட் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாகவும்  ஊடகங்கள் வாயிலாக அறிகின்றேன்' என்றார்.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியேற்றப்பட்டாலும்,  தமிழ்த் தேசியம் மலர்வதற்காக அனைவரும் ஒன்றிணையவேண்டும். ஒரு சிலரின் அற்பசொற்ப ஆசைகளுக்காக தமிழ்க் கட்சிகளை பிரித்து ஆள்வதால், தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தில்  ஏற்பட்ட இழப்புக்களை மீளப் பெறமுடியாது.  

தமிழ் மக்கள் ஒற்றுமையாக   செயற்படவில்லையாயின்,  தற்போது தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று  நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடையும் சாத்தியக்கூறு உண்டு' எனத் தெரிவித்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .