Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 08 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகரசபையில் தற்காலிக நியமனம் என்ற பேரில் அதிகார துஷ்பிரயோகம் இடம்பெறுவதாக நகரசபையின் முன்னாள் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோரால் உள்ளூராட்சிமன்றங்களுக்கான ஒப்பந்த மற்றும் பதிலீட்டு ஊழியர்கள் நியமனங்களில், காத்தான்குடி நகரசபைக்கென்று கடந்த இரண்டாம் திகதி 27 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கடந்த காலத்தில் மொத்தம் 83 ஆளணி வளத்துடன் நகரசபை நிர்வாகம் இயங்கியது. கழிவுகள் அகற்றுதல், வடிகான் சுத்திகரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கே ஆளணிப் பற்றாக்குறை நிலவியது. இந்நிலையில், நிரந்தர நியமனம் குதிரைக்கொம்பாக இருந்த காலகட்டத்தில், எம்மால் தொடர்ந்தெடுக்கப்பட்ட முயற்சியினால் 83ஆக இருந்த ஆளணி வளம், நிரந்தர நியமனங்களுடன் 143ஆக அதிகரித்தது. தொடர்ந்து, எமது நிர்வாக காலத்தில் பூரணப்படுத்தப்பட்ட ஏற்பாட்டினாலும் 2015.06.26 அன்று 37 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன்படி, காத்தான்குடி நகரசபையின் ஆளணி வளம் அதிகரித்தது. 35 வருடங்களுக்கு ஆளணி வளப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடமில்லாது, ஆளணி வளத்தை நிறைவாக்கினோம்.
இவர்களினால் தற்போது வழங்கப்பட்ட இந்த நியமனங்கள் தேவையற்றது. இந்நியமனங்கள்; இவர்களின் அரசியல் பலத்தால் புரியப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகமாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago