Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 08 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பில் மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெறவிருப்பதால் புதன்கிழமை தொடக்கம் ஐந்து தினங்களுக்கு மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச மின் பொறியியலாளர் செவ்வாய்க்கிழமை(07) அறிவித்துள்ளார்.
இதற்கிணங்க, தினமும் காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை ஐந்து மணி வரை பின்வரும் மின்பாவனையாளர் சேவை நிலையததுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுலில் இருக்கும்.
புதன்கிழமை(09) - களுவாஞ்சிக்குடி மின் பாவினையாளர் சேவை நிலைய அம்பிளாந்துறைப் பகுதிகளில் மின்வெட்டு அமுலில் இருக்கும். வியாழக்கிழமை(10) - களுவாஞ்சிக்குடி நகர மின் பாவினையாளர் சேவை நிலைய குறுமண்வெளிப் பகுதிகளில் மின்வெட்டு அமுலில் இருக்கும். வெள்ளிக்கிழமை(11)- காலை 8.30 தொடக்கம் ஏறாவூர் மின் பாவினையாளர் சேவை நிலைய ஆறுமுகத்தான் குடியிருப்பு, களுவன்கேணிப் பகுதிகளில் மின் துண்டிக்கப்படும். சனிக்கிழமை(12)- மட்டக்களப்பு நகர மின் பாவினையாளர் சேவை நிலைய இருதயபுரம், சின்ன ஊறணிப் பகுதிகளிலும்
ஞாயிற்றுக்கிழமை(13)- களுவாஞ்சிக்குடி மின் பாவினையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட பெரியபோரதீவு, முனைத்தீவு, பழுகாமம் பகுதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago