2025 மே 15, வியாழக்கிழமை

மு.கா. விலிருந்து விலகமாட்டேன்: பசீர்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 10 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை விட்டு, வேறு எந்தக் கட்சிக்கும்   மாறப்போவதில்லை என்று  முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பில்  நேற்று வியாழக்கிழமை (09) கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை விட்டு, நான் கட்சி மாறப்போவதாக கூறப்படும் கதைகளில் எவ்வித உண்மையுமில்லை. முஸ்லிம் காங்கிரஸை விட்டு  நான் விலகிச் செல்லமாட்டேன்' என்றார்.

'மேலும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் வேட்பாளராக களம் இறங்கவுள்ளேன். முஸ்லிம் காங்கிரஸை தவிர, வேறு எந்தக் கட்சியிலும் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடமாட்டேன்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .