2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஊருக்குள் நுழைந்த 7 அடி நீளமான முதலை

Suganthini Ratnam   / 2015 ஜூலை 30 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிராமத்தினுள் இன்று  வியாழக்கிழமை அதிகாலை நுழைந்த சுமார் 7 அடி நீளமான முதலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் இந்த முதலை ஊர்ந்து வந்துள்ளது.
இந்த முதலையை  ஊர்மக்கள் சேர்ந்து கட்டி வைத்து விட்டு ஏறாவூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

உடனடியாக குறித்த இடத்துக்குச் சென்ற  பொலிஸார், முதலையைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X