Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக தீர்த்து வைப்பதற்கு கிராமிய திட்டமிடல் அமைப்பு இலவச சட்ட ஆலோசனை சேவையை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது என கிராமிய திட்டமிடல் அமைப்பின் திட்ட முகாமையாளர்; வடிவேல் ரமேஸ் ஆனந், வெள்ளிக்கிழமை(31) தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா மண்பத்தில் நடைபெற்ற நடடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எமது கிராமிய திட்டமிடல் அமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் செயற்பட்டு வருகின்றது. சிறுவர்கள் மற்றும் பெண்களின் நலன் பெண்களின் வாழ்வாதாரம் என்பவற்றை மையமாக கொண்டு எமது அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் இன்று வரை சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான 36 பிரச்சினைகள் எமது அமைப்புக்கு வந்துள்ளன.
அவைகளில் கணவன் மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து சென்றமை, கணவன் குடும்பத்தை விட்டுச் சென்று வேறு திருமணம் முடித்துள்ளமை, தாபரிப்பு செலவு, சிறுவர்களின் கல்வி மற்றும் சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், குடும்ப வன்முறை, துஷ்பிரயோகம் என 36 பிரச்சினைகள் வந்துள்ளன.
எமது அமைப்பிலுள்ள இலவசசட்ட ஆலோசனைக்குழுவொன்றுள்ளது. அந்தக் குழுவுக்கு இதை கொண்டு சென்று இந்தப்பிரச்சினைகள் கையாளப்பட்டு வருகின்றன. அதில் சட்டத்தரணியொருவர் உள்ளார்.
அக்குழு மூலமாக இவ்வாறான பிரச்சினைகள் சிலவற்றை வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றங்களுக்கு கொண்டு சென்று இலவச சட்ட சேவையை வழங்கி வருகின்றோம். அத்துடன் உலவளத்தை ஆற்றுப்படுத்தும் வகையிலும் உதவிகளை வழங்கி வருகின்றோம்.
எமது இந்த செயற்பாடானது சமூக மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக பல தரப்பட்டவர்களையும் நாம் அழைத்து அவர்களுக்கு இந்த செயற்பாடு தொடர்பாக விளக்கி வருகின்றோம்.
இந்த வேலைத்திட்டங்களுக்கு ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பங்கும் உதவியும் அவசியமாகும் என்றார்.
இதில் அகரம் எனப்படும் இளைஞர் அபிவிருத்தி அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ரி.திலீப்குமார் உட்பட அதன் உத்தியோகத்தர்கள், மற்றும் கிராமிய திட்டமிடல் அமைப்பின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
56 minute ago
1 hours ago