2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் அடையாள பேரணி

Niroshini   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
புகலிடம் நிறுவனம் ஏற்பாடு செய்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும் அடையாள பேரணி, இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பமான இப்பேரணி, காந்தி பூங்கா வரை சென்றது.

இதன்போது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும் அடையாளத்தைக்காட்டும் வகையில்,  பொதுமக்களுக்கு செம்மஞ்சள் நிறத்திலான கைப்பட்டிகள் அணிவிக்கப்பட்டதுடன் ஸ்டிக்கர்களும் வாகனங்களில் ஒட்டப்பட்டது.மேலும்,விழிப்புணர்வு வீதி நாடகமும் இடம்பெற்றது.


  Comments - 0

  • TDWN Wednesday, 09 December 2015 08:37 AM

    'சிறுமிகளை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்துவதை இல்லாதொழிப்போம்' என்ற தங்கள் வாசகத்தின; அர்த்தம் என்ன அவர்கள் விரும்பினால் பரவாயில்லை என்பதா ?வாசகங்களை ஒழுங்குபடுத்தும் போது முக்கியமாக இவற்றை கவணிக்க வேண்டும் நீங்கள் சேர்த்துள்ள ஒரு வார்த்தை சிறுமிகளின் விருப்பத்துடன் பாலியல் வன்புணர்வு நடந்தால் பரவாயில்லை என்ற பாராதுரமான அர்தத்தை தாங்கியுள்ளது எனவே இவ்விடயங்களில் கவணமெடுக்குமாறு பெண்கள் அமைப்பென்ற வகையில் கேட்டுக்கொள்கிறோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X