2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

21 குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 21 குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மிளகாய்த்தூள் அரைக்கும் இயந்திரங்கள், நீர்ப்பம்பிகள், மீன்பிடித் தோணிகள், சிறுகடைக்கான பலசரக்குப் பொருட்கள், நெல்குற்றி அரிசி விற்றலுக்கான உள்ளீடுகள், உணவு பதனிடல் உபகரணங்கள் உட்பட உள்ளீடுகள் இவர்களுக்கு  வழங்கப்பட்டதாக திட்டத்துக்குப் பொறுப்பான வாழ்வாதார இணைப்பாளர் ஜே.ஆர். அகிலானந்தன் தெரிவித்தார்.

சுமார் 700,000 ரூபாய் பெறுமதியான இவை வழங்கப்பட்டன.

ஜீவபுரம், தேவபுரம், கோறளங்கேணி, பாரதிகிராமம், கடலூர், சின்னவெம்பு, விஷன்கேணி, முருக்கன்தீவு, பிரம்படித்தீவு, பாலையடித்தோணா போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கே இவை வழங்கப்பட்டன.

கிரான்  பறங்கியாமடு வேள்ட்விஷன் அபிவிருத்தி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிரான்  அபிவிருத்தி முகாமையாளர் எஸ்.பி.பிறேமச்சந்திரன், விவசாயத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஏ.லிங்கேஸ்வரராஜா கிரான் அபிவிருத்தித்திட்ட முகாமையாளர் எஸ்.மகாலிங்கம், கிரான் பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X