2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

24 ஆயிரம் நிறுத்தல் - அளத்தல் கருவிகளுக்கு முத்திரை

Kogilavani   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு ஜனவரி முதல் டிசெம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் 23,418 நிறுத்தல் அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிடப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள் மற்றும் நியமங்கள் சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதன்மூலம் 20 இலட்சத்து  38,037 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இம்மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள சகல வர்த்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என்வற்றிள் பயன்பாட்டிலுள்ள தராசுகள, அளத்தல் கருவிகளுக்கே இவ்வாறு முத்திரையடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நிறுத்தல் அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிடாமல் வர்த்தக் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்ட ரீதியிலான குற்றமாகும் எனவும் அவர் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .