2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

24ஆவது வருட நினைவுகூரல்

Gavitha   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி போன்ற கிராமங்களில் 1990.09.09 அன்று படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (09) சத்துருக்கொண்டான் கிராமத்தில் உறவினர்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

சம்பவதினத்தன்று சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குழந்தைகள், பெண்கள், வயோதிபர் உட்பட 184 பேர் கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்களால், படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து வருடாந்தம் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த சம்பவத்தின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்திருந்ததுடன் ஒரேயொருவர் மட்டும் தப்பியிருந்தார் என்றும் இந்நினைவு கூரலில் தெரிவிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X