2025 மே 05, திங்கட்கிழமை

24 மணி நேரத்தில் 5 கொரோனா மரணங்கள்

Princiya Dixci   / 2021 மே 16 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், வா.கிருஸ்ணா

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 55 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

நேற்று (15) காலை 10 மணி முதல் இன்று (16) காலை 10 மணி வரை இத்தரவுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், 57 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனையும்  206 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும், திருகோணமலை பிராந்தியத்தில் 11 பேரும், கிண்ணியா, குறிஞ்சாங்கேணியில் தலா 6 பேரும், குச்சவெளியில் 4 பேரும், தம்பலகாமம், உப்புவெளி மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் தலா இருவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலத்தில் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் இதுவரை கொரோனா தொற்றுக் காரணமாக 71 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3ஆவது அலையில் 2,538 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X