2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

247 நாடுகளின் நாணயங்கள் அடங்கிய கண்காட்சி

Menaka Mookandi   / 2014 ஜூன் 05 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


உலக நாடுகள் 247இன் நாணயங்கள் மற்றும் நாணயத்தாள்களைக் கொண்ட கண்காட்சியொன்று மட்டக்களப்பில் புதன்கிழமை (04) நடைபெற்றது.

மட்டக்களப்பு, ஆரையம்பதி இராமகிருஸ்ணமிஷன் வித்தியாலயத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியை பசறை பிரதேசத்தைச் சேர்ந்த க.அந்தோனிசாமி ஒழுங்கு செய்திருந்தார்.

பல ஆண்டுகளாக இவரால் சேகரிக்கப்பட்ட பழைமை வாய்ந்த நாணயங்களே இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்னர் ஒல்லாந்தர் மற்றும் போத்துக்கேயர்களின் ஆட்சிக் காலங்களின் போது பாவனையிலிருந்த புராதன நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

குறித்த நாணயக் கண்காட்சியை பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களும் பொதுமக்களும் பார்வையிட்டமை குறிப்பிடத்ததக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X