2025 ஜூலை 23, புதன்கிழமை

27ஆவது வருட நினைவு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாயல்களில் கடந்த 1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 103 முஸ்லிம்களின் 27வது வருட நினைவு தினம், இன்று, அப்பகுதி மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதனையொட்டி நேற்று, கறுப்பு வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டு,  துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

காத்தானகுடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் ஹூசைனியா பள்ளிவாயல் ஆகிய பள்ளிவாயல்களில், 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட்  3ஆம் திகதி, புனித இரவு ரேத்தொழுகையான இசாத்தொழுகையில் ஈடுபட்ருந்த முஸ்லிம்கள் மீது  நடத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் குண்டுத்தாக்குதல்களில் 103  பேர் கொல்லப்பட்டதுடன்  264பேர் படுகாயமடைந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .