2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

27ஆவது வருட படுகொலை நினைவு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் நகரிலும் அதனை அண்டிய கிராமங்களிலும், வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தோர் மீது ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட ஸுஹதாக்களின் (சொர்க்க வாசிகள்) 27ஆவது நினைவு நிகழ்வு, ஏறாவூரில் சனிக்கிழமை (12) மாலை அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான பிரார்த்தனை ஏற்பாடுகளை ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மேற்கொண்டிருப்பதாக சம்மேளனத்தின் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி இரவு, ஏறாவூரிலும் ஏறாவூரைச் சூழவுள்ள ஆற்றங்கரை, ஓட்டுப்பள்ளி, புன்னைக்குடாவீதி, ஐயங்கேணி, மீராகேணி, சத்தாம்ஹுஸைன் ஆகிய கிராமங்களிலும் ஏககாலத்தில் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

அதேவேளை, இத்தாக்குதலின்போது படுகாயமடைந்த பலர், பின்னாட்களில் சிகிச்சை பயனளிக்காமல் இறந்து போனார்கள். ஒட்டுமொத்தமாக இச்சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 160இற்கு மேல் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவர்களது ஜனாஸாக்கள் 'ஸுஹதாக்கள் பூங்கா' என்று ஏறாவூர் காட்டுப்பள்ளி வாசலின் புறம்பான ஒரு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

அங்குதான் வருடாவருடம், இச்சம்பவத்தின் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .