Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 20 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.ஏ.றமீஸ், பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம்.ஹனீபா
கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக அடையாளம் காணப்பட்ட 28 கடற்படையினரும், மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்றிரவு (19) அனுமதிக்கப்பட்டுள்ளனரென, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 80 பேர், அம்பாறை, ஒலுவில் தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
முன்னதாக, இவர்களைப் பரிசோதனை செய்ததில் 10 போருக்கு, கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக, நேற்று முன்தினம் (18) கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் வெலிகந்தை, கண்டக்காடு இராணுவ சிகிச்சை முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், ஏனைய கடற்படையினருக்கு நேற்று (19) மாலை பரிசோதனை மேற்கொண்டதில் 28 பேருக்கு கொரோனா தொற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்தே, 28 கடற்படை வீரர்களும், நேற்று முன்தினம் இரவே சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .