Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெரிதும் சேதமடைந்த மட்டக்களப்பு — வாழைச்சேனை பிரதான பாதையில் ஏற்பட்டுள்ள பாரிய சிதைவுகளை திருத்தியமைத்து வாவி நிரம்பி மீண்டும் பிரதான பாதையை சேதப்படுத்திவிடாமல் தடுக்கும் வெள்ளத்தடுப்பு அணைக்கட்டு அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் இத்தடுப்பு அணைக்கட்டு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெடுஞ்சாலைகள் அமைச்சின் அனுசரணையுடன் வீதி அபிவிருத்தி திணைக்களம் இத்திட்டத்ததை நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஒரு கிலோமீற்றர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் இவ்வெள்ளத்தடுப்பு அணைக்கட்டு அமைக்கும் பணிகள் சில மாதங்களுக்குள் நிறைவடையுமென வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
.jpg)
37 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
48 minute ago