Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 04 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
65 ஆயிரம் வீட்டுத்திட்ட வேலையானது எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது என, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மக்கள் இடம்பெயர்ந்த பிரதேசங்களில் இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன எனவும் அவர் கூறினார்.
வவுணதீவு, பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் 14 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'யுத்தத்தால்; பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்ப வேண்டும், அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும், வீடில்லாப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்றார்.
இருந்தபோதிலும், மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு விரைவாக மக்களுடைய காணிகளை விடுவித்தல், அவர்களுடைய வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற செயற்பாடுகளில் சில தாமதங்கள் காணப்படுவதை நாம் அறிவோம்' என்றார்.
'மேலும், வீடில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த வருடத்துக்குள் வீட்டுப் பிரச்சினையை கணிசமானளவு தீர்த்து வைப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்' என்றார்.
'குறிப்பாக, எமது மாவட்டம் யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதாகும். இயற்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
'யுத்த காலத்தில் வவுணதீவுப் பிரதேசமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, புனர்வாழ்வு அமைச்சு எனக்கென்று வேறாக ஒதுக்கிய நிதியிலிருந்து இப்பிரதேசத்திலுள்ள சில பாடசாலைகளை அபிவிருத்திக்காக நான் தெரிவுசெய்ய வேண்டும் என்று தீர்மானித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
24 May 2025
24 May 2025