2025 மே 02, வெள்ளிக்கிழமை

300 குடும்பங்களுக்கு நீர்வடிகட்டிகள்

Suganthini Ratnam   / 2014 மே 23 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை,  இராசதுரை நகர், கரவெட்டியாறு, 8ஆம் கட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த  300 குடும்பங்களுக்கு நீர்வடிகட்டிகள் நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

சுமார் 40,000 ரூபா பெறுமதியில் வழங்கப்பட்ட இந்த நீர்வடிகட்டி மூலம் எவ்வாறு சுத்தமான நீரை வடிகட்டுதல் என்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டன.

சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சுவீற்சலாந்து  நிறுவனத்தால் நீர்வடிகட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சுவீற்சலாந்து நிறுவனத்தின் சுகாதாரத் திட்ட இணைப்பாளர் பி.மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் இணைப்பாளர் ரி.நிர்மலராஜ், மண்முனை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் எஸ்.விஜயகுமார், சுகாதார வைத்திய அதிகாரி கலைச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .