2025 மே 12, திங்கட்கிழமை

35 நிரந்தர வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

 மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்;காக மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் 35 நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க சுவீடன் கூட்டுறவு நிலைய நிறுவனத்தின்; கிழக்கு மாகாணத்திற்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் ரீ. மயூரன் தலைமையில்   இன்று (24) அடிக்கல் நாட்டப்பட்டது.

ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுவன்கேணி பெரியமடுவில் 20 வீடுகளுக்கும் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை  ராஜதுரை நகரில் 15 வீடுகளுக்குமான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

தலா ஏழு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த வீடுகள் ஒவ்வொன்றும் பயனாளிகளின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ளன என்றும் இவை நான்கு மாத காலப்பகுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சுவீடன் கூட்டுறவு நிலைய நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்திற்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் ரீ. மயூரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன். சுவீடன் கூட்டுறவு நிறுவன கணக்காளர் எஸ். லெவனா சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எம். நவறஞ்சன் உட்பட இன்னும் பல பிரதிநிதிகளும் கிராம மக்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X