2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

38 தாதியர் இடமாற்றத்திற்கு எதிராக அடையாள வேலைநிறுத்தம்

Kanagaraj   / 2014 ஜனவரி 03 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண வைத்தியசாலைகளுக்காக  நியமிக்கபட்ட 38 தாதி உத்தியோகஸ்தர்களை இடமாற்றம் செய்யாது நியமனங்கள் வழங்கப்பட்ட வைத்தியசாலைகளுக்கே அவர்களை மீண்டும் நியமிக்குமாறு கோரி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அரச தாதியர் சங்கத்தினர் இன்று ஒரு மணித்தியால அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால்  1995 தாதி உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த 17.12.2013 அன்று நியமனம் வழங்கப்பட்டது.

இவற்றுள் வடக்கு , கிழக்கு, மற்றும் , வடமத்திய ஆகிய மூன்று மாகாணங்களுக்கும் மொத்தம் 38 தாதி உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப் பட்டனர்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட 38 தாதி உத்தியோகஸ்தர்களையும் ஐக்கிய தாதியர்சங்கத் தலைவர் முருத்தொட்டுவே ஆனந்த சோபித தேரின் சிபார்சுக்கு அமைய சுகாதார அமைச்சு கண்டி கொழும்பு, போன்ற வைத்திசாலைகளுக்கு இடமாற்றம் செய்துள்ளது. என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தயசாலையின் அரச தாதியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் 46 தாதி உத்தியோகஸ்தர்கள்வெற்றிடங்களும்,  வடமத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் 36 தாதிஉத்தியோகஸ்தர்கள் வெற்றிடங்களும், கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில்33 தாதி உத்தியோகஸ்தர்கள் வெற்றிடங்களும், காணப்படுகின்ற இதேவேளை கடந்த17.12.2013 அன்று ஜனாதிபதியினால் 38 தாதி உத்தியோகஸ்தர்கள் மேற்படி மூன்று மாகாணங்களுக்குமாக  நியமிக்கப் பட்டுள்ள போதிலும் அவர்களை இடமாற்றம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று  களுவாஞ்சிகுடி அதார வைத்தயசாலையின் அரச தாதியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதியினால் மேற்படி மாகாணங்களுக்கு வழங்கபட்ட 38 தாதிஉத்தியோகஸ்தர்களையும் இடமாற்றம் செய்யாது அவர்களை நியமித்த
வைத்தியசாலைகளிலே பணிபுரிய வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .