Suganthini Ratnam / 2011 மார்ச் 24 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
களுவாஞ்சிக்குடி - பெரியபோரதீவில் 4 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் ஆஜர்படுத்தப்படுத்தியபோதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பெரியபோரதீவு மாணிக்கவாசகர் வீதியை சேர்ந்த 4 வயது சிறுமியை அயல் வீட்டு இளைஞர் (வயது 16) பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சிறுமியின் தாயார் கடந்த 21ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.
இதேவேளை, குறித்த சிறுமி களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர், பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தென்னக்கோன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .