2025 மே 02, வெள்ளிக்கிழமை

43 மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 29 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கல்வி அமைச்சின் சுமார் நான்கரை இலட்சம் ரூபாய் செலவில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பார்வை குறைபாடுடைய 43 மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் செவிப்புலன் உபகரணங்களும் புதன்கிழமை (29) மட்டக்களப்பு மத்தி கல்வி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் ஒட்டமாவடி ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை,

'இலவச கல்வி, இலவச சீருடை, இலவச பாட போதனை, இலவச நூல்கள், இலவச பாடசாலை தளவாடங்கள் என்று எல்லாமே நமது இலவச கல்விக்கு உயிர்ப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கும் இலவசமாக புலனுபகரணங்களும் இப்பொழுது வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன்' என்றார்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஷரீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்hளர்கள், மற்றும் பாடசாலை அதிபர்கள்   மாணவர்களும் என பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .