2025 மே 02, வெள்ளிக்கிழமை

5 ஆம் தர மாணவரகளுக்கான போட்டி பரீட்சை

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


2014 ஆம் ஆண்டு, தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு விஷேட பயிற்சி வகுப்புக்கள் நடத்துவதற்காக, மாணவர்களைத் தெரிவு செய்யும் நிலையறிப் பரீட்சை மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை(05) நடைபெற்றது.

ஆற்றல் பேரவை ஆலோசனைக்குழுத் தலைவர் மு.பஞ்சாச்சரம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிலையறிப் பரீட்சையில் மண்முனைப்பற்று கோட்டக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் பங்குபற்றினர்.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஆற்றல் பேரவைத் தலைவருமான பூ.பிரசாந்தன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப்பரீட்சைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மண்முனைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி, மாவட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன், ஆற்றல் பேரவை நிருவாகசபை உறுப்பினர்கள் குகராஜ், சிவசுந்தரம், குணா, பத்மசீலன், மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் வகுப்பு ஆசிரியர் துவாரகன், மகாவித்தியாலய அதிபர் தவேந்திரகுமார், மாவிலங்குத்துறை விக்கினேஸ்வரா பாடசாலை அதிபர் வன்னியசிங்கம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .