A.P.Mathan / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயத்துறையை கட்டியெழுப்ப விவசாய அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக விவசாய அமைச்சின் அனுசரணையுடன் கனேடிய அரசாங்கத்தினால் சேவா லங்கா மன்றம் - மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளான ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் 5 கோடி ரூபாய் பெறுமதியான விதைநெல் மற்றும் மேட்டுநில வீட்டுத்தோட்ட செய்கைகளுக்கான விதைகளை இலவசமாக வழங்கி வருகின்றது.
இத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் இன்று காலை வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள நெடியமடு கிராமத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள உதவி பணிப்பாளர் இரா.கரிகரன் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக சேவா லங்கா மன்ற மாவட்ட பணிப்பாளர் எஸ்.நாகராஜா கலந்து கொண்டார். வவுணதீவு பிரதேச செயலாளர் கே.வில்வரட்னம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின்கீழ் 3,000 நெற்செய்கையாளர்களும் 2,900 வீட்டுத்தோட்ட செய்கையாளர்களும் 1,000 மேட்டுநில பயிர்ச்செய்கையாளர்களும் நன்மையடையவுள்ளனர். வுhகரை, கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டப்பளை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .