Suganthini Ratnam / 2017 ஜூன் 22 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 கோவில்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
ஆரையம்பதி இந்து ஸ்ரீவம்மிக்கேணி மாரியம்மன் கோவில், வடபத்திரகாளியம்மன் கோவில், கண்ணகிபுரம் ஸ்ரீநாராயணர் கோவில், வாகரை ஸ்ரீகண்ணகி அம்மன் கோவில், வாழைச்சேனை மாவடி மாரியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு தனது மாகாணசபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டை அவர் செய்துள்ளார்.
ஆரையம்பதி இந்து ஸ்ரீவம்மிக்கேணி மாரியம்மன் கோவிலில் எதிர்வரும் மாதம் வருடாந்த திருச்சடங்கு நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கோவிலின் கட்டுமானப் பணி கடந்த மே மாதம் முன்னெடுக்கப்பட்ட வேளையில், கொங்கிறீட் சரிந்து விழுந்ததில் 17 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் சுட்டிக்காட்டியதை அடுத்தே, மேற்படி கோவில்களுக்கு அவர் இந்த நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago