2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

50 வருடத்துக்கு பின்னர் கோட்டைமுனை பொற்தொழிலாளர் வீதி புனரமைப்பு

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்

கடந்த 50 வருடங்களுக்கு மேல் புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்த கோட்டைமுனை பொற்தொழிலாளர் வீதியின் புனரமைப்பு வேலைகள் இன்று சனிக்கிழமை (08) பூர்த்திடையும் நிலைக்கு வந்துள்ளன.

 ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் எனும் தொனிபொருளின் கீழ் பொருளாதார அபிவிருத்திமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இப்புரனமைப்பு வேலைத்திட்டத்துக்கு ரூபாய் ஒரு மில்லியன் நீதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 256 மீற்றர் நீளமான குறித்த வீதி, சென் செபஸ்தியான் விதியிலிருந்து ஆரம்பமாகி பாடும் மீன் வீதிவரை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோட்டைமுனை கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் பிரதேசத்துக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து, மண்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ் இவ்வீதி திருத்தும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுறை சந்திரகாந்தனின் முயற்சியின் பலனாக இந்த வீதியின் புனரமைப்பிற்கு ரூபாய் ஒரு மில்லியன் பொருளாதார அபிவிருத்திமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X