2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 31 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வறுமைகோட்டுக்குட்பட்ட 50 மாணவர்களுக்கு தலா 2000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வியாழக்கிழமை (30) களுவாஞ்சிகுடி பிரதேச செயலயத்தில் வைத்து வழங்கப்பட்டன.

குருக்கள்மடம் கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தின் கீழ் இயங்கி வருகின்ற 'சமூகமேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இவ் உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

சமூகமேம்பாட்டு மையத்தின் தலைவர் கே.ஞானராசவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், சமூகசேவை உத்தியோகஸ்தர் எஸ்.சிவகுமார், சமூகமேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் கற்றல் வளர்ச்சிக்காக மேற்படி மையம்  கடந்த காலங்களிலிருந்து உதவி வருவதாகவும், இதுபோன்ற செயற்பாடுகள் மென்மேலும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், சமூகமேம்பாட்டு மையத்தின் செயலாளர் துவாரகன் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X