2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

'61 சதவீதமான பெண்கள் முறைசாரா தொழிலில் ஈடுபடுகின்றனர்'

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்


முறைசாரா  தொழிலில் 61 சதவீதமான பெண்கள் ஈடுபடுவதாக மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஆலோசகரும் அதன் இணைப்பாளர்களில் ஒருவருமான சித்திரலேகா மௌனகுரு தெரிவித்தார்.

மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

முறைசாரா தொழிலில்; ஈடுபடும் பெண்களின் நலன் சார்ந்த விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் அடிப்படையில் மட்டக்களப்பு அமெரிக்கமிஷன் திருச்சபை மண்டபத்தில் இந்த ஊடகவியலாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

முறைசாரா தொழிலில்  69 சதவீதமான ஆண்களும்  61 சதவீதமான பெண்களும்; ஈடுபடுகின்றனர் எனவும் அவர் கூறினார்.

முறைசாரா பராமரிப்பு பொருளாதாரங்களில் ஈடுபடும் பெண்களது உழைப்பை அங்கீகரித்து நல உரிமைகளையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடமும் கொள்கை வகுப்போரிடமும் அவர்; வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பான கொள்ளை விளக்க குறிப்பு ஒன்றை எதிர்வரும் 25ஆம் திகதி வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடமொன்றுக்கு பெண்களின் பிரச்சினைகள் தொடர்பில் 300 முறைப்பாடுகள் எமது சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்திற்கு கிடைக்கின்றன.  மாதமொன்றுக்கு 20 முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

இதில் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகங்கள் போன்ற பல்வேறுபட்ட பெண்களின் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இது கடந்த காலங்களை விட அதிகமெனக் குறிப்பிடலாம் எனவும் அவர் கூறினார்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளர் இ.சரளா உட்பட அதன் முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .