2026 மே 06, புதன்கிழமை

7 மீன்பிடி படகுகளும் கரையை வந்தடைந்தன: மீனவர்கள்

Kogilavani   / 2013 மே 14 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் காத்தான்குடி கடலில் மீன்பிடிக்க சென்று கரையை வந்து சேராமலிருந்த ஏழு மீன்பிடி படகுகளும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கரையை வந்து சேர்ந்ததாக காத்தான்குடி கடற்கரை மீனவர்கள் தெரிவித்தனர்.

மகெசன் சூறாவளியினால் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலை மற்றும் பலத்த காற்று காரணமாக உடனே கரைக்கு திரும்ப முடியாமல் போனதாக கரையை வந்தடைந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனால், சில மீன்பிடி உபகரணங்களையும் மீன்பிடி வலைகளையும் கடலில் விட்டுவிட்டு வரவேண்டி இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, கரையிலுள்ளவர்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு தமது தொலைத்தொடர்பு கருவிகளும் செயற்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு, பூநொச்சிமுனை கடற்கரை துறைமுகம் மற்றும் காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை துறைமுகம் ஆகியவற்றிலிருந்து மேற்படி மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

இந்த ஏழு மீன்பிடி படகுகளில் இரண்டு படகுகள் தினமும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வரும் படகுகள் என்றும் ஏனைய ஐந்து படகுகளும்; பெரிய மீன்பிடி படகுகள் என்றும் தெரியவருகிறது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .