Princiya Dixci / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.ஹனீபா
கிழக்கு மாகாணத்தில் 7 உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்களைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நாகராசா மணிவண்ணன் 2021.01.29ஆம் திகதிய அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்களின் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளமையால், அவ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தவிசாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இதன்படி, அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் மற்றும் பொத்துவில் ஆகிய 2 உள்ளூராட்சி சபைகளுக்கும் தவிசாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு, இம்மாதம் 12ஆம் திகதி காலை 10 மணிக்கு பொத்துவில் பிரதேச சபை சபா மண்டபத்திலும், இறக்காமம் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு, அதே தினத்தன்று பிற்பகல் 02.30 மணிக்கு இறக்காகம் பிரதேச சபை சபா மண்டபத்திலும் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு, இம்மாதம் 11ஆம் காலை 09 மணிக்கு பிரசே சபை சபா மண்டபத்திலும், ஏறாவூர் நகர சபைக்கான தலைவர் தெரிவு, அதே தினத்தன்று காலை 11 மணிக்கு நகர சபை சபா மண்டபத்திலும், மண்முனை பிரதேச சபை தவிசாளர் தெரிவு, பிற்பகல் 02.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026