2025 மே 05, திங்கட்கிழமை

7000 வெளிநாட்டு சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டன

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 03 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருதில் 7000 வெளிநாட்டு சிகரட்டுக்களைத் தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததன் பேரில் தாங்கள் சாய்ந்தமருது-5 தபாலதிபர் வீதியிலுள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோதே 7000 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிகரட்டுக்களைக் நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியதுடன் அவற்றை தம்வசம் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரைத் தாம் கைது செய்திருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கல்முனை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி. சோமகுமார தலைமையிலான ஆறு பேரடங்கிய பொலிஸ் குழுவினர் இந்த திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

கைப்பற்றப்பட்ட இந்த 7000 ஆயிரம் சிகரட்டுக்களின் பெறுமதி சுமார் ஒரு இலட்ச ரூபாய் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுக்கள் டுபாய் நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டிருப்பது விசாரணை மூலம் தெரியவந்திருக்கின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X