Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனையில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சால் நிர்மாணிக்கப்பட்ட 78 வீடுகளுக்கான உரிமைச் சான்றிதழ்கள், புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் எதிர்வரும் சனிக்கிழமை (26) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கவிருக்கின்றன.
25 வருடங்களுக்கு மேலாக முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் உயர்பாதுகாப்பு வலயமாக அடையாளமிடப்பட்டு, இரு வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட தனியாருக்குரிய காணிகளிலே, இந்த வீடுகள் அமைந்துள்ளன.
இவ்வீடுகளைக் கையளிப்பதற்காக அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகைதரும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் வழங்கவுள்ளார்.
மாவட்டச் செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உட்பட அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் மேற்கொண்டு வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago