Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையைத் தடைசெய்யுமாறு வலியுறுத்தி, எதிர்வரும் 07ஆம் திகதி, மாவட்டம் தழுவிய ஹர்த்தால் போராட்டத்துக்கு, தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
அவ்வமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன், இது தொடர்பாக, இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தொழிற்சாலை காரணமாக, ஏராளமான பாதிப்பு ஏற்படுமெனக் குறிப்பிட்டுள்ளார்.
"இது, இனத்துக்கோ, மதத்துக்கோ எதிரான போராட்டம் அல்ல. வானத்தை நம்பி வாழும் கிராமத்தில், நளொன்றுக்கு 20,000 லீற்றருக்கும் மேலதிகமாக நீர் உறிஞ்சப்பட்டால், சிறு குளங்களும் வற்றி, சுடுகாடாகிவிடும் நிலை ஏற்படும். அருகிலுள்ள கிராமங்களும் இதனால் பாதிக்கப்படும்" என்று, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தொழிற்சாலையை நிறுத்துமாறு, ஜனாதிபதிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், இந்த விடயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும், எனவேதான், 7ஆம் திகதி, முழு மாவட்டத்திலும் ஹர்த்தாலை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போராட்டத்துக்கு, மாவட்டத்திலுள்ளவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும், அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago